ஜனாதிபதியால் மொரகஹகந்த நீர்த்தேக்கம் திறப்பு!

Wednesday, January 11th, 2017

நீர்ப்பாசனம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கிய மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு கன்னி நீர் வழங்கி திறந்து வைக்கப்பட்டநிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (11) நடைபெற்றுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு, விவசாய அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்தபோது இதற்கான அடிக்கல் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன.

அத்துடன் இத்திட்டத்தின் மூலம் மாத்தளை, குருணாகல், திருகோணமலை, பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூன்று இலட்சம் ஏக்கர் காணியில் புதிதாக பயிர்செய்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தூய குடிநீரானது, வடமத்திய மாகாண பிரதேசத்தில் நிலவும் சிறுநீரக பிரச்சினை தொடர்பிலான தீர்வுக்கு முடிவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த திட்டத்தின் முதற்கட்ட பணிகளை 2018 ஆம் ஆண்டிலும், முழுமையான பணிகளை 2020 ஆம் இலும் முடிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Moragahakanda Opening Ceremoney

Related posts:

ஈஸ்ரர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு விஷேட கட...
மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை அடக்கு முறை என கூறமுடியாது - பொது மக்கள் பாதுகாப்ப...
வெளிநாட்டுக் கடன் மீள் செலுத்துகை இடைநிறுத்தம் குறித்து சர்வதேச நாணய நிதியம் மதிப்பாய்வு!