ஜனாதிபதித் தேர்தல்: 78,403 வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிரகாரிப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு!

Thursday, October 17th, 2019

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 இலட்சத்து 17 ஆயிரத்து 918 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கப்பட்ட 717,918 விண்ணப்பங்களில் 6 இலட்சத்து 39 ஆயிரத்து 515 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் , 78 ஆயிரத்து 403 விண்ணப்பங்கள் நிரகாரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்தநிலையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் தமது வாக்குகளை இம் மாதம் 31 ஆம் திகதியும், நவம்பர் மாதம் 1 ஆம் திகதியும் வாக்களிக்க முடியும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இரண்டு தினங்களில் வாக்களிக்க முடியாதோர் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி அருகில் உள்ள தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் எனவும் கூறிய ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழுவை சேர்ந்த ஊழியர்கள் 4 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

Related posts: