ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைப்பு!

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் முன்னர் உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்கும் யோசனைக்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதால், அந்த யோசனை செயலிழந்துள்ள நிலையில், இந்த புதிய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் முடிந்தால் அதற்கு முன்னர் தூக்குத் தண்டனையை அமுல்படுத்தி போதைப் பொருள் ஒழிப்புக்கு பெரிய பிரசாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தான் போட்டியிட்டால், மாத்திரமே ஜனாதிபதித் தேர்தலை ஜனாதிபதிக்கு முன்கூட்டியே நடத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
6 கோரிக்கைகளை முன்வைத்து போராடத் தயாராகும் ஆசிரியர் சேவை சங்கம் !
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!
ஒரு தலை காதல் - பெண் உத்தியோகத்தரை கத்தியால் குத்தரிய நபர் தானும் தற்கொலை முயற்சி!
|
|