ஜனாதிபதிக்கு பங்களாதேஷில் சிறப்பான வரவேற்பு!

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனாவின் அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று முற்பகல் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பங்களாதேஷுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இது என்பதனால், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.
டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை, பங்களாதேஷின் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீட், சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.மேலும், இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் தேசிய கொடிகளினால் டாக்கா சர்வதேச விமான நிலையம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.பங்களாதேஷின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், நிதி அமைச்சர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதி வரவேற்பதற்காக விமான நிலையத்துக்கு வருகைத்தந்திருந்தனர்.
Related posts:
|
|