ஜனாதிபதிக்கு கடிதம் கொடுத்த கத்தோலிக்க எம்.பிக்கள்!
Friday, August 23rd, 2019ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் குறித்து உரிய விசாரணைகளை செய்வதற்காக சுயாதீன ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேர் ஜனாதிபதிக்கு குறித்த விடயம் தொடர்பில் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் லன்சா, அருந்திக்க பெர்ணான்டோ, சனத் திஷாந்த, இந்திக்க அனுருத்த மற்றும் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே ஆகியோரேகுறித்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
இதேவேளை குறித்த கடிதத்தின் பிரதி கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மின்சார சபையின் பொறியியலாளர்கள் அதிரடி தீர்மானம்!
கண்ணீர் அஞ்சலி!
அதானி குழுமம் விதிகளை மீறியதற்கு ஆதாரம் இல்லை - உச்ச நீதிமன்ற நிபுணர்கள் குழு!
|
|
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம் தொடர்பான உடன்படிக்கை பயனுள்ளது – இந்திய அரசாங்கம் கரு...
எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர் நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுந்தகவல் மூலம் அனுப்பிவைக்கப்படும...
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; நாட்டின் பல பகுதிகளில் மேக மூட்டமான நிலை - வடக்கு, கிழக்கு, ஊவா உள்ளிட்ட ...