ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி – அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பம் வெளியானது!

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யும் விடயம் பெரும் இழுபறி நிலையில் இருந்து வந்தது.
நாட்டின் பல பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் உட்பட முஸ்லிம் மற்றும் ஏனைய இன சகோதரர்களாலும் இதற்கு குரல் கொடுக்கப்பட்டுடு வந்தது.
இந்நிலையில் சுகாதார தொழில் நுட்பக்கழுவின் பரிந்துரைக்கமைய இலங்கை அரசு ஜனாசா நல்லடக்கத்திற்கு நெற்றையதினம் (25) அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கம்!
மக்களின் வரிப்பணம் வீண் விரயம் செய்வதை ஏற்கமுடியாது : யாழ் மாநகர முதல்வருக்கு ஈ.பி.டி.பி. உறுப்பினர்...
பண்டிகைக்கால மோசடி தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் - நுகர்வோர் அதிகார சபை தெரிவிப்பு!
|
|