ஜனவரி முதல் விமான நிலைய விசேட கருமபீடம் மூடப்படும் என அறிவிப்பு!

Wednesday, December 28th, 2016

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்களை பதிவு செய்யும் கட்டுநாயக்க விமான நிலைய விசேட கருமபீடம் ஜனவரி முதலாம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்படுமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிக்கின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதாலேயே இந்த விசேட கருமபீடம் தற்காலிகமாக மூடப்படுவதாக பணியகம் அறிவிக்கின்றது.

இதன்படி வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று செல்பவர்கள் பதிவு செய்வதாயின் அல்லது பதிவுகளை புதுப்பித்துக் கொள்வதாயின் பணியகத்தின் பிரதான அலுவலகத்திலோ அல்லது பிராந்திய அலுவலகங்களிலோ செய்து கொள்ளுமாறு பணியகம் கேட்டுக் கொள்கின்றது.

வேலைவாய்ப்புக்காக செல்வபர்கள் பதிவுகளை பிரதான அலுவலகத்திலோ அல்லது பிராந்திய அலுவலகத்திலோ பதிவு செய்த பின்னர் விமான நிலையத்திற்கு வரலாம். விமான நிலையத்திற்கு வந்த பின்னர் பதிவுகளை மேற்கொள்ள முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுமாறும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது

colombo-1

Related posts: