ஜனவரி முதல் அரச பணியாளர்களின் கொடுப்பனவு உயரும்!

வரும் ஜனவரி மாதம்முதல் அரச பணியாளர்களின் ஊதியம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அலுவலக உதவியாளரில் இருந்து சட்டமா அதிபர் வரையில் அனைத்து அரச பணியாளர்களுக்கும் இந்த வேதன அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது. அதன்படி, அலுவலக உதவியாளரின் அடிப்படை வேதனம் 14ஆயிரம் ரூபாயில் இருந்து 23 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும்.
அதுபோல சட்டமா அதிபரது வேதனம் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட மருத்துவர்களின் அடிப்படை வேதனம் 60 ஆயிரம் ரூபாயில் இருந்து 69ஆயிரத்து 756 ரூபாவாக அதிகரிக்கப்படும். இதற்கிடையில் அரச பணியாளர்களின் வேதனம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளின் பொருட்டு அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 12 பில்லியம் ரூபாய் மேலதிகமாக தேவைப்படுவதாகவும் அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, அடுத்த ஆண்டுக்கான பாதீடு, சாதாரண மக்களுக்கு பல நன்மைகளைக் கொண்டிருப்பதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் மஹூருப் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|