ஜனவரி முதலாம் திகதிமுதல் கட்டாய நடைமுறை – விரைவில் வர்த்தமானி வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Wednesday, November 24th, 2021

இலங்கையில் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் கட்டாய நடைமுறைக்கு வரும் திட்டம் தொடர்பில் அனைத்து முச்சக்கரவண்டிகளின் சாரதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து முச்சக்கரவண்டிகளும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மீற்றர் டெக்சிகளாக மாற்றப்படுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முச்சக்கரவண்டிகளை மீற்றர் டெக்சிகளாக மாற்றும் திட்டம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மேல் மாகாணத்தில் நடைமுறைக்கு வரும்.

அத்துடன் 3 மாத காலப்பகுதிக்குள் நாட்டின் ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் இதற்கான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும்.

மேலும், மீற்றர் இல்லாது வாடகை முச்சக்கரவண்டிகளைச் செலுத்துவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 765 பேர் குணமடைந்தனர் - 63 ஆயிரத்து 439 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு ச...
இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி மியன்மாரினால் அன்பளிப்பு - இறுதியில் இலங்கைவந்தடையும் எனவும் எதி...
செயலிழந்தது யாழ் நிலா ரயில் சேவை - டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்று பொது முகாமையாளர் உறுத...