ஜனவரியில் புதிய நீர் கட்டணம் அறிமுகம் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்!

நீர் கட்டண மறுசீரமைப்பு முறை குறித்து அமைச்சர்கள் குழு ஆராய்ந்ததும் அடுத்தவருடம் ஜனவரி மாதம் புதிய கட்டண முறை அறிவிக்கப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று பாராளுமன்ற கட்டத் தொகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையானது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நீர்க்கட்டணத்தில் மறுசீரமைப்பை மேற்கொள்ளும். ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்னும் கட்டண மறுசீரமைப்பு செய்யப்படவில்லை. அதன்படியே இம்முறை 30 வீத அதிகரிப்பு முன்வைக்கப்பட்டது
ஆனால் தற்போது மீளாய்வு செய்யும்படி ஜனாதிபதி கோரியதால் அது தொடர்பில் ஆராய அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு ஆராய்ந்து இறுதி முடிவு எடுத்ததும் புதிய கட்டண அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
Related posts:
|
|