ஜனவரியில் இடம்பெற்ற 235 விபத்துகளில் 250 பேர் பலி – வீதி விபத்துகளை சட்டங்களால் மட்டும் குறைக்க முடியாது, சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் அவதானமம் அவசியமென பொலிசார் வலியுறுத்து!

Thursday, February 3rd, 2022

கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2 ஆயிரத்து 473 பேர் மரணித்ததுடன் 5 ஆயிரத்து 474 பேர் பலத்த காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 377 வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதேநெரம் நேற்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 11 பேர் மரணித்துள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் விரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில் காலி – பூஸா – வெல்லபட பகுதியில் தொடருந்து கடவையில் தொடருந்துடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலியாகினர்.

குருநாகல் – அம்பேபுஸ்ஸ வீதியில் நேற்றிரவு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றுடன் மோதி முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் பலியாகினர்.

அத்துடன் அநுராதபுரம் – புத்தளம் வீதியின் பொத்தானேகம மற்றும் பிலியந்தலை – கோலமுன்ன ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துகளில் இருவர் மரணித்தனர்.

எம்பிலிப்பிட்டிய – சூரியகந்த மற்றும் உடவலவ – தெமடகல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இருவர் மரணித்ததாகவும்ட பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் ஆயிரத்து 875 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 235 விபத்துகளில் 250 பேர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் 39 முச்சக்கர வண்டி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்தவகையில் ஒரு நாட்டில் வீதி விபத்துகளை சட்டங்களால் மட்டும் குறைக்க முடியாது, சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் அவதானம் மிக முக்கியமானது.

வீதி விபத்துக்களுக்கு ஆளாகும் சாரதிகள் குறைந்தபட்சம் தமது உயிரைப்பற்றியாவது சிந்தித்து செயற்பட்டிருந்தால் இன்னும் பல உயிர்களை காப்பாற்ற முடியுமானதாக இருந்திருக்கும் என்றும் சமூக ஆர்வலகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: