ஜனவரிமுதல் 06 மாதங்களுக்கு வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்ம் – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

எதிர்வரும் ஜனவரி மாதம்முதல் 06 மாதங்களுக்கு வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்புமுதல் பாணந்துறை வரையிலான ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் சில நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், களனி மிட்டியாவத்தை ரயில் பாதையின் வேகக் கட்டுப்பாட்டை நீக்கி, வேகத்தை அதிகரிப்பதற்கான புனரமைப்பு பணிகளையும் இம்மாத முற்பகுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலவச தபால் கொடுப்பனவை அதிகரிக்க விசேட வர்த்தமானி!
பாடசாலைகளை மூடிவைத்திருப்பது மாணவர்களின் வாழ்க்கையை இருளாக்குவதாக அமையும் - கல்வி அமைச்சர் பேராசிரி...
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆறு பொலிஸார் பாதுகாப்பு - பொலிஸ் மா அதிபர் அதிரடி நடவடிக்கை!
|
|