ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே அதிகார பகிர்வு ஆகும் – அமைச்சர் மனோ கணேசன்!

Wednesday, November 15th, 2017

அதிகாரப் பகிர்வானது வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கோ அல்லது வேறு மாகாணத்திற்கோ கூடுதல் அதிகாரத்தை வழங்குவது என்ற பொருளல்ல. அது நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் ஒன்றாகும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகருமமொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்;வில் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்

எமது நாட்டில் உள்ள 9 மாகாணங்களுக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும். பெரும்பாண்மை மக்களிடம் உள்ள அதிகாரங்களை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப் போவதாக நாட்டில் தவறான ஒரு கருத்து நிலவுகின்றது. இதில் எந்த உண்மையும் இல்லையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts: