சோளப் பயிற்செய்கையை அதிகரிக்க நடவடிக்கை!

Friday, February 8th, 2019

சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக கொள்கை ஒன்றும் நிறுவனம் மற்றும் தொழிநுட்பத்தின் பங்களிப்பு அவசியம் என ஹெக்டர் கொப்பே கடுவ விவசாய அலுவல்கள் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் சுட்டிகாட்டியுள்ளது.

அண்மைக்காலமாக படைப்புழுவின் தாக்கத்தினால் சோள உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன் பிரச்சினைகளும் ஏற்பட்டதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வறட்சி வலயங்களில் சிறியளவில் சோள உற்பத்தியில் ஈடுபட்டிருந்தோரும் பெரும் பிரச்சினைக்கு உள்ளாகியிருந்தனர். இவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதிலும் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியின் போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பதும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் ஹெக்டர் கொப்பே கடுவ விவசாய அலுவல்கள் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: