சொந்த வீடு இல்லாத மக்களுக்கு வீடுகள்!

Friday, February 3rd, 2017
இலங்கையில் குறைந்த மற்றும் மத்திய வருமானம் பெறும் குடும்பங்களுக்காக சொந்த வீட்டு வசதிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட  யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் மத்திய வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டு உரிமையினை பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டில் 620,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டத்தை உரிய காலத்திற்குள் செய்து முடிப்பதை உறுதி செய்வதற்காக, குறித்த வேலைத்திட்டத்துக்கு தேசிய முன்னுரிமையினை பெற்றுக் கொடுத்து துரிதமாக செயற்படுத்துவதற்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், திறைசேரியின் கீழ் விசேட செயலணி ஒன்றை ஸ்தாபிக்க உள்ளது.

மேலும், அந்த செயலணிக்காக ஒதுக்கி கொடுக்கப்படுகின்ற அனைத்து இடங்களுக்காகவும் காணி வங்கி ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

home2

Related posts: