சொந்த மண்ணில் சொந்த மொழி பேசிகௌரவமான வாழ்வை வாழ வழிவகுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – யாழ் மாநகர முன்னாள் மேயர் திருமதி பற்குணராஜா தெரிவிப்பு!

Sunday, July 19th, 2020

தமிழ் மக்கள் தங்களுடைய சொந்த மண்ணில் சொந்த மொழி பேசி, கௌரவமான  வாழ்வை வாழக் கூடிய உயரிய நிலையை உருவாக்கித் தந்தவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா என்று யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் தமிழ மக்கள் தமது முழுமையான அபிலாஷைகளுடன் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்கிக்கொள்வதற்காக நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வீணைக்கு வாக்களித்து அமைச்சரின் கரங்களை பலப்படுத்துதன் ஊடாக தற்போது மக்கள் பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

பளை நகர் பகுதியில் அமைச்சர் டகஸ் தேவானந்தா கலந்துகொண்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: