சொத்து விபரங்கள் குறித்த தகவல்களை உடனடியாக அறிவியுங்கள் – ஜனாதிபதி!
Monday, May 6th, 2019நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் குறித்த தகவல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக கோரியுள்ளதாக அறிய முடிகிறது.
அதேபோன்று அமைச்சுகளின் செயலாளர்கள் தற்போதும் முன்னரும் எவ்வாறு செயற்பட்டுள்ளனர் என்ற விபரத்தையும் ஜனாதிபதி கோரியுள்ளார்.
முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் அமைச்சுகளில் பணிபுரிந்தர்கள் தொடர்பில் தொடர்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையடுத்தே ஜனாதிபதி இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளார் என தெரியவருகின்றது.
பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்டுள்ள சில சந்தேகநபர்கள் அரசியல்வாதிகளுடன் கடந்தகாலத்தில் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளதாகப் பொலிஸாரும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான பின்புலத்தில்தான் அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களை ஜனாதிபதி உடனடியாக கோரியுள்ளதாக மேலும் அறிய முடிகிறது.
Related posts:
|
|