சொத்து விபரங்களை வெளிக்காட்டாதவர்களுக்கு அபராத தொகை அதிகரிப்பு – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!
Monday, April 2nd, 2018சொத்து விபரங்களை வெளிக்காட்டாத அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கூறியுள்ளது.
அதன்படி, இதுவரை அறவிடப்பட்ட 1000 ரூபா தொகையை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே கூறினார்.
குறித்த அபராத தொகையை திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகள் தற்போது அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உயர் வகுப்பு அரச ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அவர்களின் சொத்துக்கள் குறித்த ஆண்டறிக்கையை சமர்பிப்பது கட்டாயமானது என்று ஆணையாளர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் நூற்றுக்கு 75 வீதமானவர்கள் தமது சொத்துக்கள் குறித்த ஆண்டறிக்கையை வெளிப்படுத்துவதில்லை என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே கூறினார்.
அதற்கேற்ப அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக நெவில் குருகே கூறினார்
Related posts:
|
|