சொத்துப்பிரச்சனையே வண்ணார்பண்ணையில் நிகழ்ந்த குழந்தையின் கொலைக்கு காரணம்!

யாழ்பாணம் வண்ணார்ப்பண்ணையில் நேற்று இடம் பெற்ற குழந்தையின் கொலைச்சம்வத்துக்கு சொத்துப்பிரச்சனையே காரணம் எனத்தெரியவருகின்றது. குழந்தையை வெட்டிக்கொன்ற பெரிய தகப்பனார் குறித்து பொலிசாரின் விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தையின் பெரிய தகப்பனான இவர் தனது தம்பியின் குழந்தையை சிறிய கண்டம் கோடாரியால் வெட்டி படுகொலை செய்தமையுடன் தமது தாயாரையும் குரூரமாக வெட்டிச்சரித்தார் பின் தானும் நஞ்சருந்தித்தற்கொலை செய்து கொண்டார்.
இந்தகொலைச்சம்பவத்தின் பின்னணியில் சொத்துப்பிரச்சனையே இக்கொலைக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அறிக்கையின் பிரகாரம் கொலையாளி முன்னாள் போராளி எனவும் எனவும் மறுவாழ்வின் பின் அவர் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டார் என்றும் அவர் அரபு நாடுகளில் தொழில் புரிந்து விட்டு தற்போது உள்@ரில் நகைவேலை செய்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெற்றோர் இருக்கும் வீட்டை தனது பெயருக்கு மாற்றுமாறு தாயாரிடம் அவர் கேட்டு வந்தார் எனவும் பெற்றோர் அதற்குச்சம்மதிக்கவில்லை எனவும் மது போதையில் தினமும் வந்து பணத்தைத்தா அல்லது வீட்டைத்தா எனத்தொந்தரவு கொடுத்துள்ளார்.
அதே போல நேற்றுக்காலையிலும் தாயாருடன் வந்து சண்டை பிடித்துள்ளார். தாயாரை தனது கைக்கோடாரியால் தாக்கிவிட்டு வீட்டின் ஹோலில் நின்ற இளைய சகோதரனின் 3 வயதுப்பெண்குழந்தையை பிடித்து அவளின் கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார்.
குழந்தை வீட்டு வாசல் வரை ஓடிவந்து வீழ்ந்து உயிழந்துள்ளது என ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும் குழந்தையின் பெற்றோர் நேற்று அங்கு இல்லாத சந்தர்பத்தைப்பயன்படுத்தியே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Related posts:
|
|