சைவநெறி பாடநூல்களில் காணப்படும் தவறுகளைத் திருத்த விஷேட குழு !

Thursday, February 16th, 2017

பாடசாலைகளில் சைவநெறி பாடம் கற்பிக்கும்போது ஆசிரியர்கள் குறித்த பாடநூல்களில் உள்ள எழுத்துப்பிழைகள், மற்றும் திரிபுபடுத்தப்பட்ட பதிவுகள் காரணமாக எதிர்கொள்ளும்  பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அதனை எதிர்காலத்தில் செழுமைப்படுத்தும் முகமாக துறைசார் வல்லுநர்கள் கூடி ஆலோசனை மேற்கொண்டதுடன் அதற்கான தீர்வுகளை காணும் பொருட்டு விஷேட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது

கோயில் வீதி யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (16) நடைபெற்ற இந்தக்  கலந்துரையாடலில் சைவநெறி பாடநெறிசார்ந்த பேராசிரியர்கள் முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், துறைசார் தலைவர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆசிரியர்கள் மற்றும் சைவப்புலவர்கள் இணைந்து சைவநெறி பாட நூல்களில் உள்ள பல்வேறு தவறுகள் மற்றும் குறைபாடுகளை சுட்டிக்காட்டியதுடன் தமது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைத்தனர்.

குறித்த கலந்துரையாடலின் இறுதியில் சைவநெறி பாட வல்லுநர்கள் அடங்கிய விஷேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர், சைவநெறி  பாடப் புத்தகங்களில் காணப்படும் குறைபாடுகளையும், தவறுகளையும் திருத்திக்கொள்வது மற்றும் சீரமைப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி தீர்வுகாண்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பாக எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பில் விஷேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதுடன் குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராயும் அடுத்த கூட்டம் மார்ச் மாதம் 21 ஆம் திகதி கோயில் வீதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இதனிடையே தமிழ்மொழி மூலமான பாடநூல்களில் காணப்படும் எழுத்து, கருத்துப் பிழைகளுடன் திரிபுபடுத்தப்பட்ட தமிழர்களின் வரலாறு தொடர்பாகவும் அவற்றின் திருத்தங்கள் தொடர்பாகவும் ஏற்கனவே இவ்வாறான குழு ஒன்று நியமிக்கப்பட்டு கல்வி அமைச்சுடன் கலந்தரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3

Related posts: