சைற்றத்தை திறந்த பல்கலைக்கழகமாக முன்னெடு ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் – பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான!

Monday, March 20th, 2017

பணம் செலுத்தி கல்வியை பெற்றுக் கொள்ளக்கூடிய திறந்த பல்கலைக்கழகமாக சைற்றம் நிறுவனத்தை முன்னெடுக்க வேண்டுமென்று பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக இந்த நிறுவனத்தை திறந்த பல்கலைக்கழகமாக முன்னெடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

தற்பொழுது சைற்றம் நிறுவனத்தில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வாக இதனை கொள்ள முடியும் என்றும்   பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற வானொலி உரையாடலில் கலந்து கொண்டபோதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நெவில் பெர்னாண்டோ, அரச தனியார் கூட்டாக இதனை முன்னெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts: