சைனோபாம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களில் 95 % மானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு – இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தகவல்!

Tuesday, July 20th, 2021

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சைனோபாம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களில் 95 % மானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருவதாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது இந்த விடயம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சைனோபாம் தடுப்பூசி உலகளாவிய ரீதியில் பரவி வரும் டெல்டா திரிபுக்கு எதிராக செயற்படக் கூடியது என பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவொன்றினால் தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

தெற்காசியாவில் விரைவாக தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நாடு இலங்கையாகும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறை உள்ளிட்ட பொருளாதார மையங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: