சைட்டம் விவகாரம்: சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தாலும் அரசின் நிலைப்பாட்டினை மாற்றம் கடையாது – உயர் கல்வியமைச்சர்!
Wednesday, November 8th, 2017
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்து ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடரவுள்ளதாக மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உயர் கல்வியமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில்,
“..ஜனாதிபதியின் தீர்மானத்தினை வைத்தியர்கள் ஆமோதித்துள்ளனர். பலகலைக்கழக பேராசிரியர்கள் ஆமோதித்துள்ளார்கள். சைட்டம் மாணவர்களும் உடன்பட்டுள்ளனர். குறித்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம். குறித்த நிறுவனத்தின் முதல் குழு வெளியேறியது எங்களது ஆட்சிக் காலத்திலேயே ஆகும்.
பின்னர் அவர்கள் நீதிமன்றம் சென்றனர். அதற்கு மேன்முறையீடு செய்யப்பட்ட வழக்கும் உயர்நீதிமன்றில் உள்ள நிலையில், அதன் தீர்ப்புக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்..” என தெரிவித்திருந்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் கூடாரம் அமைத்து அவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்நிலையில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படாவிட்டால் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அந்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் நிமல் கருணாசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|