சைட்டம் விவகாரம்: கைச்சாத்திடப்பட்ட பிரேரணை!

Wednesday, February 21st, 2018

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலையீட்டுடன் சைட்டம் மாணவர்களுக்கு நியாயமொன்றை பெற்றுக்கொடுக்கும் முன்னணியொன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த முன்னணியில் இதுவரை அந்த சங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சைட்டம் மாணவர்களின் பெற்றோர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்க அலுவலகத்தில் சைட்டம் மாணவர்களுக்கு நியாயமொன்றை பெற்றுக்கொடுக்கும் முன்னணியினால் தயாரிக்கப்பட்ட பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.

இதில், அரச மருத்துவ அதிகாரதிகள் சங்கம் , அரச மருத்துவ பீட மாணவர் பெற்றோர் சங்கம் மற்றும் சைட்டம் மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றியம் கைச்சாத்திட்டன.

Related posts: