சைட்டம் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்க வாய்பில்லை – அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல!

Friday, August 18th, 2017

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை எந்தவிதத்திலும் அரசாங்கம் பொறுப்பேற்க வாய்பில்லை என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மாலபே மருத்துவமனை அரசாங்கத்தால் கையேற்கப்பட்டுள்ளது.எனினும் சைட்டம் மருத்துவ கல்லூரியை ஒருபோதும் கையேற்க முடியாது.சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு உயர்நீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ளது.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்வாறு அதனை அரசாங்கத்திற்கு பொறுப்பேற்பது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.2011 சைட்டம் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது அதனை ஒருவர் கூட எதிர்க்கவில்லை.சைட்டம் கல்லூரியை ஆரம்பிப்பதற்கு கடந்த அரசாங்கம் 600 மில்லியனை வழங்கியது.

அப்பொழுது பல்கலைகழக மாணவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.தற்போது அரசியல் நோக்கத்திற்காகவே சைட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Related posts: