சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் சம்பிக்க!
Tuesday, July 4th, 2017மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினைக்கு மருத்துவ சபைக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படுத்தப்படும் இணக்கப்பாடுகளின் மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வியடமானது மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையதாகும். அரச மருத்துவக் கற்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அதுபோல மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.மருத்துவ கல்வி தொடர்பாக மருத்துவ சபை தான் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். எனவே, அரசாங்கம் மருத்துவ சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடி இணக்கப்பாடுகளுக்கு வரவேண்டும்.மருத்துவசபை யோசனைகளை முன்வைத்துள்ளது. அரச மருத்துவ பீடங்களின் பீடாதிபதிகளும், பேராசிரியர்களும் யோசனைகளை முன்வைத்துள்ளனர். எனவே, இந்தப் பிரச்சினையை வீதிகளிலோ அல்லது வைத்தியசாலையிலோ தீர்க்க முடியாது.மருத்துவ சபைக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படுத்தப்படும் இணக்கப்பாடுகளின் மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்
Related posts:
|
|