சைட்டம் நிறுவனத்தை பாதுகாப்பதற்கான அரசியல் சதி  – அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம்!

Saturday, February 25th, 2017

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை பாதுகாப்பதற்கான சதித்திட்டம் தற்போது இடம் பெற்று வருவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர இது குறித்து தெரிவிக்கையில் –

எதிர்வரும் திங்களன்று(27) சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியினூடாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சைட்டம் நிறுவனத்தின் மாணவர்களை வைத்தே குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் தமக்கு ரஷ்யா பட்டதாரிப் பட்டத்தினை வழங்கக் கோரியே ஆகும். இதன்படி முதலாவது மற்றும் இரண்டாவதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு ரஷ்யா மருத்துவ பல்கலைக் கழகத்தில் ஓராண்டு கல்வி பயில வாய்ப்பு வழங்குவதோடு; அதன் பின்னர் இலங்கையில் வந்து வேலை செய்யக் கூடியவாறு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.

அதன் பின்னர் ரஷ்ய மருத்துவக் கல்லூரியின் கிளையாக மாலபே, சைட்டம் நிறுவனத்தினை மாற்றி அதனூடாக பட்டம் வழங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

மேலே கூறியதற்கு இணங்க ஒருபோதும் சைட்டம் மூடப்பட மாட்டது.. நெவில் ப்ரனாந்து அவர்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது.சைட்டம் எனும் பெயர் மாற்றப்பட்டு ரஷ்யா மருத்துவக் கல்லூரியின் பெயர் சூட்டப்படலாம். நாம் கூறுவதெல்லாம் இந்த நல்லாட்சி அரசு யாரை வேண்டுமானாலும் மாடுகளாக எண்ணினாலும் எம்மை மட்டும் மாடுகளாக என்ன வேண்டாம் என தெரிவித்திருந்தார்.

lahiru-vs-SAITM

Related posts: