சைட்டம் தொடர்பில் இந்த வாரம் இறுதி முடிவு – ஜனாதிபதி!

Tuesday, October 24th, 2017

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர்வரும் 2 அல்லது 3 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

சைட்டம் பிரச்சினை தொடர்பில் இந்த வாரம் அரசாங்கம் தமது இறுதி தீர்வை அறிவிக்கவுள்ளது. இதுதொடர்பில் உரிய தரப்பினருடன் அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்தி பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அதேநேரம், நாட்டின் நிகழும் முரண்பாடுகளையே ஊடகங்கள் பெரிதுப்படுத்தி வெளியிடுகின்றன.காலை முதல் இரவு வரையில் சமூகத்தில் நிலவுகின்ற பிளவுகளும், முரண்பாடுகளும் தொடர்ந்து மக்களுக்கு காண்பிக்கப்படுகின்றன.

ஆனால் சமூகத்தை சக்திமயப்படுத்தி நாட்டை முன்னேற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளர்.

Related posts: