சைட்டம் தொடர்பான விசேட குழுவினால் திட்ட வரைபு பூர்த்தி!
Saturday, November 11th, 2017
சர்ச்சைக்குரிய சைட்டம் மருத்துவ கல்விக்கு தேவைப்படும் குறைந்தளவு தராதரம் தொடர்பான திட்ட வரைபு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் சைட்டம் தனியார் வைத்திய கல்லூரி முற்றாக ஒழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் அறிக்கை வெளியானது. அதனை அடுத்து நாட்டின் வைத்திய பீடங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் வைத்திய கல்வி அடிப்படை தகுதி மற்றும் தராதரம் குறித்த வரைபு பூர்த்தியாகியுள்ளது.
இதுவிடயம் தொடர்பில் ஜனாதிபதி நியமித்த விசேட குழுவே இந்த திட்ட வரைபை பூர்த்தி செய்துள்ளது.சைட்டம் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது.
Related posts:
அதிவேக நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களுக்குத் தடை!
இஸ்லாமிய மக்களின் புனித நோன்பு பெருநாள் இன்று!
உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் சந்திப்பு - உலக வங்கியிட...
|
|