சேனா புழுவைப் போன்று பிறிதொரு புதிய வகை புழு இனம் கண்டுபிடிப்பு!

Friday, January 25th, 2019

நெல் மற்றும் சோளப் பயிர்களை நாசப்படுத்தும் மற்றுமொரு புதிய வகை புழு இனம் ஒன்று, திம்புலாகல – மனம்பிட்டிய பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேனா என்ற படைப் புழுவைப் போன்று நாவல் நிறத்தையுடைய குறித்த புழுவின் உடலின் சில இடங்களில், செம்மஞ்சள் நிறமும் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவை, நாற்று இலைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக குறித்த பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவை, நெற்கதிர்கள் மாத்திரமன்றி, நாற்று இலைகளையும் உணவாக உட்கொண்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சேனா என்ற படைப்புழு சோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 50,000 ஏக்கர் நிலப்பரப்பு சோள செய்கை பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

42 ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் - 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு!
மோசடி செய்யும இலங்கை மாணவர் போலி விவரங்கள்அனுப்புகின்றனர் - நியூசிலாந்தின் குடிவரவுத்துறைப் பணியகம்...
ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையும் சமமாக அபிவிருத்தியடையும் யுகம் இதற்...