சேதமடைந்த நாணயத்தாள்: டிசம்பர் மாதத்தின் பின்னர் பயன்படுத்த தடை!
Saturday, December 2nd, 2017எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பின்னர் திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட நாணயத்தாள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நாணயத்தாளின் மூலம் எந்தவொரு வங்கியிலும் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ள முடியாதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சேதப்படுத்தப்படும் நாணயம் தொடர்பில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக நாணய திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய அவ்வாறு சேதமடைந்த அல்லது மாற்றப்பட்ட நாணய தாள்கள் இருப்பின் அதனை டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தக வங்கிகள் ஊடாக மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
Related posts:
ஜப்பானால் இலங்கைக்கு பல மில்லியன் பெறுமதியான அம்புலன்ஸ் வண்டி நன்கொடை!
இலங்கையர்கள் இருவருக்கு கொரோனா - உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!
பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக முறைப்பாடு - திடீர் சோதனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா...
|
|