சேதமடைந்த நாணயத்தாள்கள் மார்ச் 31இன் பின்னர் செல்லுபடியற்றது!

Tuesday, March 27th, 2018

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் கிழிந்த மற்றும் சிதைவடைந்த நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இவ்வாறான நாணயத்தாள்களை அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் மாற்றிக்கொள்ளலாம். எனினும் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று மத்தியவங்கி தெரிவித்துள்ளது.

1949 ஆம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக வேண்டுமென்றே நாணயத்தாள்களை சேதப்படுத்தினால் தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும்.

Related posts: