சேதன திரவ உரக் கொள்கலன்களின் வெடிப்பு தொடர்பில் ஆராய்கிறது விவசாய அமைச்சு!

Saturday, December 11th, 2021

விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட சேதன திரவ உரக் கொள்கலன்கள் அதிக அழுத்தத்தினால் வெடித்துச் சிதறியமை தொடர்பில் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை உடனடியாக அறிவிக்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு விவசாயப் பணிப்பாளர் நாயகமான கலாநிதி அஜந்த டி சில்வா அறிவித்துள்ளார்.

மாவட்ட இணைப்பாளர்களால் முன்வைக்கப்படும் தகவல்களைக் கருத்திற் கொண்டு மேலதிக பாதுகாப்புகள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆய்வுகளை விரைந்து மேற்கொள்வார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: