சேதன உர பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கைக்கு சில அமைச்சுக்கள் அமைதி காக்கின்றன – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றச் சாட்டு!

Friday, October 29th, 2021

இரசாயன உரத்துக்குப் பதிலாக, சேதன உர பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும்போது, சில அமைச்சுக்கள் மௌனம் காப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இணையவழி முறைமையில், ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனை சந்தைப்படுத்த முடியாமல் போனது என்பதை அரசாங்கம் என்ற அடிப்படையில் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் குறித்து சுகாதார அமைச்சுதான் அதிகமாக கருத்து தெரிவிக்க வேண்டும். இந்த பிரதிபலன் யாருக்கு கிடைக்கிறது?

ஆனால், சுகாதார அமைச்சு இது குறித்து ஒருநாளாவது கருத்து தெரிவித்துள்ளதா? என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேநேரம், இதனூடாகச் சுற்றாடலுக்கு ஏற்படும் நன்மை குறித்து சுற்றாடல் அமைச்சு கருத்து தெரிவித்துள்ளதா? எனவே, பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் என்ற இரண்டையும் தங்களால் செயற்படுத்த முடியாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: