சேதனப் பசளையை பயன்படுத்தி பெரும்போக பயிர்ச்செய்கை இன்றுமுதல் ஆரம்பம் – விவசாயத்த திணைக்களம் அறிவிப்பு!

Friday, October 15th, 2021

பெரும்போகத்திற்கான பயிர்ச்செய்கை இன்றுமுதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக விவசாய திணகக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இம்முறை 8 இலட்சம் ஹெக்டேரில் நெற்செய்கை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சேதனப் பசளையை பயன்படுத்தி நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன தெரிவித்துள்ளார்.

சேதனப் பசளை உற்பத்திக்காக 6 இலட்சத்து 52 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு தலா 7 ஆயிரத்து 500 ரூபா வீதம் கொடுப்பனவிற்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..

இதில் 3 இலட்சத்து 75 ஆயிரம் ஹெக்டேருக்கு தலா 7 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்..

இதனிடையே, பெரும்போகத்திற்கு நீரை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவம் தொடர்பிலான பிரிவின் பணிப்பாளர் S. அபேசிறிவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: