செல்வந்த நாடுகளில் பின்பற்றப்படும் முறைமையை இலங்கையில் அமுல்படுத்த முடியாது – பிரதமர் மஹிந்த சுட்டிக்காட்டு!

Sunday, August 29th, 2021

கூலித் தொழிலாளிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்காக யாரும் குரல் கொடுப்பதில்லை தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச செல்வந்த நாடுகளினால் பின்பற்றப்பட்டு வரும் கோவிட் கட்டுப்பாட்டு முறையை இலங்கையில் அமுல்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினரும் விடுத்து வரும் கோரிக்கைகள் குறித்து பதிலளித்துள்ள பிரதமர் கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் சில செல்வந்த நாடுகள் முன்னெடுக்கும் திட்டங்கள் இலங்கைக்கு பொருத்தமுடையதல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் நாட்டை முடக்கினாலும் மாதாந்த சம்பளம் பெறுவோர் சம்பளம் பெற்றுக் கொள்வார்கள் எனினும் நாளாந்த கூலித் தொழில்களில் ஈடுபடுவோர் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் அந்தக் கூலித் தொழிலாளிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்காக யாரும் குரல் கொடுப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

சீன இராணுவத்துக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது நன்றியை தெரிவித்துள்ளார். சீன இராணுவத்தினரால் இலங்கையின் முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ள நிலையிலேயே அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ருவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச இலங்கைக்கு வந்த சினோபார்ம் தடுப்பூசியின் 3 இலட்சம் டோஸ்களை நன்கொடையாக வழங்கிய சீன மக்கள் இராணுவத்திற்கு நன்றி.

இலங்கையில் தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமாக இருப்பதை உறுதி செய்ய பெறப்பட்ட உதவிகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: