செல்வச்சந்நிதி மஹோற்சவ காலத்தில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்படும் – பருத்தித்துறை பிரதேச செயலர் !

Wednesday, August 1st, 2018

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ முன்னாயத்தக் கூட்டம் கடந்த 11 ஆம் திகதி பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி தலைமையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் பொதுமக்களுக்கு அறியத்தரப்பட்டன.

  • மஹோற்சவ காலத்தில் ஆலயச் சூழலில் ஒரு வழிப்பாதை நடைமுறைப்படுத்தப்படும். ஆலய பிரதான வீதியின் ஊடாக உள்நுழைந்து ஆற்றங்கரை வீதி வழியாக வெளிச்செல்ல முடியும். ஆற்றங்கரை பக்கத்தில் இருக்கின்ற பாதையூடாக ஆட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன வாகனத்தரிப்பிடத்திற்கு செல்ல முடியும்.
  • ஆலய வீதியில் பக்தி தொடர்பான விடயங்களுக்கே அனுமதிக்கப்படும்.
  • கடைகள் மற்றும் வீதியோரக் கடைகள் ஆலய வீதியில் அமைத்தல் தடை செய்யப்படும்.
  • தனியார் காணிகள் கடை அமைப்பதற்கு வழங்கப்படுகின்றபோது மஹோற்சவம் நிறைவடைந்து மூன்று நாட்களுக்குள் அக்காணிகள் துப்புரவு செய்யப்படவேண்டும். தவறின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஆலய மஹோற்சவ காலத்தில் உணவு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டியிருப்பின் நாட்டின் எப்பாகத்திலேனும் உணவு நிலையம் நடத்துவதற்கான அனுமதியினைப் பெற்றிருக்க வேண்டும்.
  • உணவு நிலையங்களில் உணவினைக் கையாள்பவர்கள் மற்றும் அன்னதான மடங்களில் பணி புரிபவர்கள் அனைவரும் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • உணவு நிலையங்களுக்கான குடிநீர் பொதி சுகாதார பரிசோதகரினால் அனுமதிக்கப்பட்ட இடத்திலிருந்து பெறப்பட வேண்டும்.
  • கடை உரிமையாளர்கள் தினமும் கழிவகற்றல் நடவடிக்கையை மேற்கொள்ளல் வேண்டும்.
  • குளிர்களி விநியோகம் மேற்கொள்பவர்கள் இரவில் குளிரூட்டியினை நிறுத்திவிட்டு காலையில் இயக்குவது கண்டறியப்பட்டால் அவை தடை செய்யப்படும்.
  • தண்ணீர்ப் பந்தல்களில் ஐஸ்கட்டி தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படும் ஐஸ்கட்டி பயன்படுத்தக்கூடாது.

உள்ளிட்ட பல விடயங்கள் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.

Related posts: