செலுத்தப்பட்டது எரிபொருள் கப்பலுக்கான கட்டணம் – பெட்ரோல் தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Monday, July 18th, 2022பெட்ரோல் ஏற்றி வரும் கப்பல் இன்று (18) அல்லது நாளை (19) நாட்டை வந்தடைய உள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த எரிபொருள் கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டை வந்தடைந்தவுடன் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பமாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை தற்போது 100,000 ஐத் தாண்டியுள்ளது எனவும் மற்றும் பதிவு முடியும் வரை புதிய எரிபொருள் இருப்பு விநியோகம் தொடங்கப்படாது எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, அகில இலங்கை பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யூ.எஸ்.எஸ். பெர்னாண்டோ தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான எரிபொருள் ஜூலை 20 ஆம் திகதிமுதல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ் மாநகர பகுதிக் கடலோரங்களை சுற்றுலா தளமாக உருவாக்கும்போது சுற்றுச் சூழல் தொடர்பில் அதிக கவனம் செல...
மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் – வானிலை அவதான நிலையம்!
வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு - இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!
|
|