செலவுகளை கட்டுப்படுத்த அமைச்சு மட்ட குழு!

Friday, December 16th, 2016

எதிர்வரும் காலங்களில்  செலவுகளைக் கட்டுப்படுத்த  எல்லா அமைச்சுகளிலுமிருந்தும் தெரிவு செய்யப்பட்ட ஒரு குழு இயங்குமென நிதி அமைச்சு  வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

கடந்த புதனன்று சகல அமைச்சுக்களிலுமுள்ள செயலாளர்கள் கலந்துகொண்ட மாநாடொன்றில் இப்படியான நடவடிக்கைகள் நிதிப் பொறுப்பை அதிகரிக்கும் திறன்கொண்டதாக இருக்குமென்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் 2017 இல்  உள்ள பிரேரணைகளை மையப்படுத்தியே இந்த விவாதங்கள் இடம்பெற்றன என்று அமைச்சர் கூறியுள்ளார்.

பிரேரிக்கப்பட்ட மூலதனத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை சேகரித்து உடனடியாக அவற்றை ஆரம்பிக்கும்படி அமைச்சர் சகல அமைச்சரவைச் செயலாளர்களையும் கேட்டுக்கொண்டார்.சம்பந்தப்பட்டநிதி, 2017 ஜனவரி தொடக்கம் எல்லா அமைச்சுக்கும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேசமயம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு தடவை செலவு விபரங்கள் அடங்கிய அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  அரச திட்டங்களை வெற்றிகரமாக முடிக்க அரச சேவையில் உள்ளவா்களின் தொழில் திறன் நோக்கப்படும் என்பதையும் இந்தக் கூட்டத்தில் அவர் சுட்டிக்காட்டினார்.

gov2

Related posts: