செயலிழந்துள்ள இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தை நாளைமறுதினம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் – மின்சார சபையின் பொது முகாமையாளர் தகவல்!
Monday, August 14th, 2023நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்துள்ள இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தை நாளைமறுதினம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி காலை, குறித்த மின் உற்பத்தி இயந்திரம் திடீரென செயலிழந்தமையினால் மொத்த மின்சார உற்பத்தியில் 270 மெகாவோட் மின்சாரம், தேசிய கட்டமைப்பிற்கு கிடைக்காது போனது.
மேலும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று இயந்திரங்களில் ஒரு மின்பிறப்பாக்கி வருடாந்த பராமரிப்புக்காக கடந்த ஜூன் மாதம் இடைநிறுத்தப்பட்டது.
இதனால் தற்போது, ஒரேயொரு மின்பிறப்பாக்கி மட்டுமே இயங்கும் நிலையில் உள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், சமனலவாவி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் குறைந்தமையினால் அதன் மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|