செயலிழந்தது பி.சி.ஆர். இயந்திரம் – 48 மணிநேரத்திற்குள் தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இராணுவதளபதி உத்தரவு!

Thursday, October 29th, 2020

ராகம வைத்தியசாலையில் உருவாக்கப்பட்ட ஆய்வுகூடத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு என பயன்படுத்தப்பட்ட பிசிஆர்சோதனை இயந்திரம் பழுதடைந்துள்ளதால் சுமார் 20 ஆயிரம் பிசிஆர் சோதனை முடிவுகள் தாமதமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக கொரோனா ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது உட்பட முக்கிய முடிவுகளை எடுப்பதில் குழப்பநிலை உருவாகியுள்ளது என கொரோனா வைரஸ் தொடர்பான தேசிய நிலையம் தெரிவித்துள்ளது.

சுகாதார அதிகாரிகளுக்கும் தேசிய செயலணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது பிசிஆர் சோதனை இயந்திரம் பழுதடைந்ததை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 250 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டு மே மாதம் தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட பிசிஆர் சோதனை இயந்திரமும் பழுதடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து 48 மணிநேரத்திற்குள் இதற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இராணுவதளபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த இயந்திரத்தை திருத்துவதற்காக சீனாவிலிருந்து ஒருவர் வரவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: