செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் குருதிக்கொடை!

Friday, November 10th, 2017

டக்ளஸ் தேவானந்தாவின் 60 அவது பிறந்தநாளையொட்டி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாக செயலாளர்கள் கட்சின் ஆதரவாளர்கள் குருதிக்கொடை வழங்கியுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவில் இன்றையதினம் (10) இக் குருதிக் கொடை அளிக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தாவின் 60 ஆவது பிறந்தநாளையொட்டி வடக்கு கிழக்கு பகுதிகளெங்கும் பல்வேறு சமூகப் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் பல பாகங்களில் சிரமதானம் போன்ற சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன் ஒரு கட்டமாகவே கட்சியின் நிர்வாக செயலாளர்கள் உள்ளிட்ட அதரவாளர்கள் ஒன்றுதிரண்டு இக் குருதிக் கொடையினை வழங்கியுள்ளனர்.

இதற்காக யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு தனது நன்றிகளை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: