செயற்பாடுகளை மறுசீரமைப்பது தொடர்பில் கண்காணிக்க விஷேட குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி!

Wednesday, May 1st, 2019

அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் செயற்பாடுகளை மறுசீரமைப்பது தொடர்பில் கண்காணித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விஷேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அளவியல், தொழில்துறை அளவியல் மற்றும் சட்ட அளவியல் துறைகளின் கீழ் வழங்கப்படும் சேவைகளை உரிய முறையில் வழங்கும் நோக்கிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரம், கொழும்பு மாவட்டம் மற்றும் மேல்மாகாணத்திலுள்ள அரசாங்கத்தின் காணியொன்றை வர்த்தமானி மூலம் பிரசுரித்து அதனை முகாமைத்துவம் செய்வதற்கு தேவையான அதிகாரங்களுடனான சொத்து முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

Related posts: