செம்பியன்பற்று விளையாட்டு கழகத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் சீருடைகள் வழங்கிவைப்பு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் மருதங்கேணி செம்பியன்பற்று விளையாட்டு கழக வீரர்களுனக்கான சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் குறித்த விளையாட்டு கழக நிர்வாகத்தினர் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நேற்றையதினம் (12) விளையாட்டு கழக செயலாளர் தலைமையில் குறித்தபகுதி பொது மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் முன்னாள் பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் அவர்களால் கழக நிர்வாகத்தினரிடம் விளையாட்டுச் சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டது.
Related posts:
எமது மண்ணின் தொன்மைக் குடிகள் தாம் என்பதில் தமிழ் மக்கள் உறுதியுடன் உள்ளார்கள் - ஈ.பி.டி.பியின் சர்வ...
ரஞ்சன் ராமநாயக்கவின் பிணை விவகாரம்: நுகேகொட நீதிமன்றத்தில் சரணடைந்தார் சுமந்திரன் – சுமந்திரன் மக்கள...
முடக்கல் நிலை அவசியமில்லை - அமைச்சரவை தீர்மானம்!
|
|