செம்பியன்பற்றில் 70லட்சம் பெறுமதியான கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது!

Friday, August 26th, 2016

செம்பியன்பற்று பிரதேசத்தில் 30 கிலோகிராம் கஞ்சா பொதியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

39 வயதுடைய குறித்த நபர் 70 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா பொதியுடன் இன்று அதிகாலை மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபரை பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்த பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக யாழ்.குடா நாட்டில் போதைப் பொருட்களுடன்   கைதுசெய்யப்படுபவர்களின் தொகை அதிகரித்துவருகின்றது.   பல்வேறு சட்டங்கள் இருக்கு நிலையில் போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்தவரகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: