செப்ரொம்பர் முதல் குடிநீர் போத்தல்களுக்கும் SLS சான்றிதழ்!

Tuesday, August 23rd, 2016

அனைத்து வகையான குடிநீர் போத்தல்களுக்கும் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLS) தரச் சான்றிதழ் கட்டாயம் என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் குறித்த விடயம் அமுல்படுத்தப்படுவதாக அதிகார சபை மேலும் அறிவித்துள்ளது.

குடிநீர் போத்தல் தொடர்பில், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை காரணமாகவே, குறித்த முடிவுக்கு வந்துள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: