செப்ரெம்பர் – முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை– முழுமையான ஆதரவை வழங்குமாறு கல்வி சார் ஊழியர்களிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை!

Tuesday, July 27th, 2021

இலங்கையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியும் என கல்வி அமைச்சு நம்புவதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது அளவை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் படி மற்றும் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் கீழ் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்.

எனவே, செப்டெம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் முழு ஆதரவை தாம் கோருவதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: