செப்ரெம்பர் மாதத்தின் பின்னர் நாட்டை முழுமையாக திறக்க நடவடிக்கை – அமைச்சரவையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021

எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தின் பின்னர் நாட்டை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, ஜுலை மற்றும் ஒகஸ்ட் மாத இறுதிக்குள் மேலும் 10.5 மில்லியன் தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை 80 வீதம் வரையில் நிறைவடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியிலிரந்து நாட்டை மீண்டம் கட்டியெழுப்ப செப்ரெம்பர் மாதத்தில் நாடு முழுமையாக திறக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: