செப்பனிடப்படும் வீதிகளின் அபிவிருத்தி தொடர்பில் ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் கண்ணன் ஆராய்வு!

Tuesday, November 27th, 2018

காரைநகர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் வீதிகளின் அபிவிருத்தி தொடர்பிலான முன்னெடுப்புக்கள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேச சபையின் உறுப்பினருமான கண்ணன் (ரஜனி) நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார்.

நீண்டகாலமாக குறித்த பிரதேச சபைக்குட்பட்ட வீதிகள் பல செப்பனிடப்படாதிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில் குறித்த வீதிகளை செப்பனிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுத்துவரப்படும் நிலையிலேயே அதன் செயற்பாடுகள் தொடர்பில் கண்ணன் பார்வையிட்டுள்ளார்.

இதனிடையே மக்களின் அவசர தேவைகளுக்கு உடன் தீர்வுகாணப்பட வேண்டும் என அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: