சூரிய ஒளி மின்சாரம் திட்டம் செப்டெம்பரில் ஆரம்பம்!

Sunday, August 21st, 2016

சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் செப்டெம்பர் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜேராம மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்வலு பிரதிமைச்சர் அஜித் பி.பெரேரா மேலும் தெரிவிக்கையில், சூரிய ஒளி மூலம் மின்சக்தி வழங்கும் திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் பேருக்கு மின்சாரம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை கிராமங்கள், நகரங்களில் வாழும் மக்களும் இத்திட்டத்தின் கீழ் மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடிவதோடு, அதற்காக வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாகவும் பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.